மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழப்பு –  186 பேருக்கு தொற்று!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து  காங்கேயன் ஓடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், கோறளைப்பற்று மத்தியைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 33 பேரும், களுவாஞ்சிகுடியில் 14 பேரும், வாழைச்சேனையில் 05 பேரும், காத்தான்குடியில் 20 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 21 பேரும், ஓட்டமாவடியில் 31 பேரும், செங்கலடி ஒருவரும், ஏறாவூரில் 27 பேரும்,

பட்டிருப்பில் 16 பேரும், வவுணதீவில் 03 பேரும், ஆரையம்பதியில்  03 பேரும், கிரான் 03 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர் 03 பேரும், சிறைச்சாலையில் 07 பேர் உள்ளடங்களாக 186 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்லுகின்றது. எனவே பொதுமக்கள் பயணத்தடையை மீறி வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.