மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பேருக்கு கொரோனா

0

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 22பேரும் செங்கலடி வைத்திய அதிகாரிகள் பிரிவில் 11பேரும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 10பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பில் இதுவரை 8,275 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,  116பேர் உயிரிழந்துள்ளதுடன் 755 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று மாத்திரம் 32,221 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  இதற்கமைய இதுவரை 142,754 கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.