மட்டக்களப்பில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

0

மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்  இப்பகுதிகளிலுள்ள மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தலைமையில், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டன.

இதில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள  மக்கள், தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்தனர்.