மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு- இருவர் கைது!

0

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை அகழ்ந்து, கனரக வாகனத்தில் ஏற்றிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மணலை கொண்டுச் செல்வதற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கனரக வாகனங்களையும் வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.