மட்டக்களப்பில் சுகாதார ஊழியர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

0

மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார ஊழியர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனால் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பினை கௌரவப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மட்டக்களப்பு மக்களை பாதுகாப்பதற்காக தினமும் தொற்று நீக்குதல், கழிவுகள் அகற்றல் என பல்வேறு அர்ப்பணிப்புமிக்க சேவையினை சுகாதார ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையில் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக கடமையாற்றும் 250 சுகாதார ஊழியர்களுக்கு இதன்போது நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் மகராஜ், சுவாமி நீலமாதவானந்த மகராஜ், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,சுகாதார குழுவின் தலைவர் சிவம்பாக்கியநாதன், மாநகர ஆணையா ளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் சிவராஜா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.