மட்டக்களப்பில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு

0

மட்டக்களப்பில் நேற்றிரவு தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த தாதிய உத்தியோகத்தர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது படுகாயமடைந்த தாதிய உத்தியோகத்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமை தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் நடராஜா ராதா என்பவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.