மட்டக்களப்பில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை – வைத்தியர் மயூரன்

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலை காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 14 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெரியகல்லாறு 02ஆம், 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு அப்பகுதியில் தொடர்ச்சியாக அன்டிஜன், பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.