மட்டக்களப்பில் நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் முறை குறித்த அறிவிப்பு வெளியானது!

0

மட்டக்களப்பில் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ளும் முறை குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் குறித்த மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நோயாளர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தங்களது கிளினிக் இலக்கத்துடன் கிளினிக் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் தங்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயரினை வழங்குவது காட்டாயமானது எனவும், இந்த தகவல்களை வழங்கி மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்காக காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 065-3133330 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.