மட்டக்களப்பில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில்  மேலும் புதிதாக  4 பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புணானை பொலிஸ் சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை பொலிஸ் நிலையமாகவும்,

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி பொலிஸ் நிலையமாகவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி கொக்குவில் பொலிஸ் நிலையமாகவும், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் கர்ப்பலா பொலிஸ் நிலையமாகவும் 4 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.