மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்

0

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டறியும்  விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், சுகாதாரதுறையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது அறிவுறுத்தல்களை மீறி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவரும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்டவர்களுக்கு, கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.