மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது வீதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 12வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் வியாபாரா நடவடிக்கைக்காக வருகை தந்த குறித்த சிறுவன், யூதா ததேயு தேவாலயத்தின் முன்பு வியாபார நடவடிக்கையின்போது, முச்சக்கர வண்டி சாரதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த கார் சிறுவனை மோதியுள்ளது.
குறித்த விபத்தின்போது சிறுவன் ஸ்தலத்திலே உயிரிழந்தான். இதன்போது முச்சக்கரவண்டியும் சேதத்துக்குள்ளாகியதுடன் காரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.