மட்டக்களப்பில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி, மாங்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காத்தான்குடி- கபுறடி வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா இர்பான் (வயது 32) என்பரே உயிரிழந்துள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  இவர், தனது நண்பர்களுடன் திருகோணமலை நோக்கிப்  பயணித்துக் கொண்டிருக்கும்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்துபோன முச்சக்கரவண்டி வீதியில் தடம்புரண்டுள்ளது.

இதன்போது காயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தப்போதும்  அவர் வழியிலேயே  உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த மற்றையவரான அப்துல் றஹுமான் லத்தீப் (வயது 54) என்பவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சடலம் பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.