மட்டக்களப்பில் வெல்லாவெளியில் இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்பு

0

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் இன்று (புதன்கிழமை) மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள காணியில் துப்பாக்கி இருந்ததை அடுத்து அதனை கண்ட பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற பொலிஸார் அப்பகுதியை சோதனையிட்டதுடன் துப்பாக்கி இருந்த பகுதியின் நிலப்பகுதியை மேலும் தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது 2 ரி-56 ரக துப்பாகிகளை மீட்டுள்ளதுடன் இது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகளாக இருக்கலாம் ஏறணும் பொலிஸார் தெரிவித்தனர்.