மட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் லதாகரன்   இதனை  உறுதிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் கல்முனை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மேலும் குறிப்பிட்டார்.