மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

0

மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காத்தான்குடி இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டலுகம, மொனராகலை – படல்கும்புற ஆகிய பகுதிகளும் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.