மட்டக்களப்பு அரச அதிகாரிகள் பயணித்த பேருந்து மீது கல்வீச்சு!

0

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அரச அதிகாரிகளை ஏற்றிவந்த பேருந்து மீது மட்டக்களப்பு சத்துரக்கொண்டான் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு நடாத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்தின் மீது நேற்று(புதன்கிழமை) இரவு இவ்வாறு கல்வீச்சு நடாத்தப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளுக்கான குறித்த பேருந்மது சேவையானது அண்மையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது என்பதுக்   குறிப்பிடத்தக்கது.