மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதி வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!

0

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

இதனை அடுத்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு, காவற்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து தீயினை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை தீ பரவலுக்கான காரணம் அறியப்படாததுடன் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.