மட்டக்களப்பு- கொக்குவில் வாராந்த சந்தை தற்காலிகமாக மூடப்படுகின்றது

0

மட்டக்களப்பு மாநகர சபை பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விடுத்துள்ள அறிவித்தல்.
நாட்டில் காணப்படுகின்ற கொரோனா பரவல் மற்றும் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கொரோனா பரவலின் அச்ச நிலமைகள் காரணமாக கொக்குவில் வாராந்த சந்தையானது மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என்பதனை பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அறியத் தருகின்றோம்.


அத்தோடு எமது பிரதேசத்தை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க சுகாதார வழிமுறைகளைப் பேணுமாறும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


மாநகர ஆணையாளர்,

மாநகர சபை,

மட்டக்களப்பு