மட்டக்களப்பு சாதனை வெற்றி நிலையாட்டியது அநூராதபுரத்தில்.

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு திடலில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது

அந்த வரிசையில் இன்றைய தினம் (29 2 2020) நடைபெற்ற கபடி போட்டியின் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

மட்டக்களப்பு மாவட்ட அணி மற்றும் அம்பாறை மாவட்ட அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இடம்பெற்றது இதில் 43 க்கு 36 என்ற புள்ளி அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அதேவேளை அம்பாறை மாவட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது

குறித்த இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் முதலாம் திகதி(01-03-2020) மாலை நிறைவுபெறும்.