மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வாலிபர் முன்ணனியினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

0

மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வாலிபர் முன்ணனியினால் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்முகமாக செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு வாணி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இன்று (09.02.2020) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன .

இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனி தலைவர் லோ.தீபாகரன் தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனி தலைவர் கி.சேயோன் வாலிபர் முன்னி கோறளைப்பற்று பிரதேச (வாழைச்சேனை) இணைப்பாளர் கே.தேவகாந்தன் , மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) பிரதேச இணைப்பாளர்
எஸ்.ஜனகன், வாலிபர் முன்னணியின் கல்வி துறை பொறுப்பாளர் தே.மயூரன் ,
மாற்றுத்திறனாளிகள் அபிவிருத்தி துறை பொறுப்பாளர் கே. சோபனன் , தமிழரசுக்கட்சியின் மகளீர் அணி செயற்பாட்டாளர் கந்தையா கலைவாணி ஆகியோர் கலந்துகொண்டனர்

மேலும் ஆறுமுகத்தான் குடியிருப்பு பத்திரகாளியம்மன் கோயில் தலைவர் லோகிதராஜா , கோயில் நிர்வாகிகள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது