மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக தருமரெத்தினம் கணேசரெத்தினம் நியமனம்!

0

மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த தருமரெத்தினம் கணேசரெத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை, இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழு அன்மையில் வழங்கி வைத்துள்ளது.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், தனது ஆரம்பகல்வியை அக்கரைப்பற்று அல்ஹிதாயா வித்தியாலயத்தில் பயின்றார். பின்னர், கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்த அவ,ர் உயர் தரக் கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தில் கற்றார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டு, அங்கு பொருளியல் சிறப்புப் பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.

25 வருடங்களாக அரச கல்விச் சேவையில் இணைந்து தனது பணியை ஆற்றிவந்த நிலையிலேயே, மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.