மட்டக்களப்பு நகரில் கடையொன்றில் தீ விபத்து!

0

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நகர்ப்பகுதியில் அமைந்துள்ள முபாரக் புடவைக் கடையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதோடு சேத விபரங்களும் வெளியாகவில்லை.