மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!

0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு  போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 அம்ச கோரிக்கையினை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாக பணிமனைக்கு முன்னால் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து பணிபஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.