மட்டக்களப்பு மாவட்டத்தில் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் திறப்பு!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவந்த லங்கா சதொச விற்பனை நிலையங்கள் முடப்பட்டு இருந்த லங்கா சதொச வியாபார நிலைங்கள் இன்று திறக்கப்பட்டன.

தற்போது நிலவும் அசாதாரன நிலையினை கருத்திற்கொனடு; மக்களுக்கு சுமுகமான பொருட்கள் விநியோகம் நடைபெறவேண்டும் என்பதற்காக இன்று காத்தான்குடி களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பில் கள்ளியங்காட்டு களஞ்சியசாலை ஆகிய லங்கா சதொச வியாபார நிலைங்களை அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா திறந்து வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புன்னியமூர்த்தி மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ. நவேஸ்வரன் பிரதேச செயலாளர் ரி.வாசுதேவன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொன்டனர்.