மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

0

நாட்டில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.