மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன தலைவரின் முன் மாதிரியான அழைப்புச்செய்தி.

0

நடந்து முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவான அனைவருக்கும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  அத்தோடு வாக்களிப்பு பணியில் ஈடுபட்டு தமக்கான பிரதிநிதியை  ஜனநாயக ரீதியில் தெரிவு செய்த அத்தனை இளைஞர்களுக்கும் நன்றி பாராட்டுகிறேன் என எமது ஊடக பிரிவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ம.பிரியங்கன் தெரிவிப்பு.

மேலும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இளைஞர் பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரம்தான் இளைஞர் அபிவிருத்தி பணியில் ஈடுபட முடியும் என்றில்லை.

இந்த தேர்தலில் வெற்றியடைய முடியாதவர்களும் இளைஞர் பணியில் தொடர்ந்து ஈடுபடலாம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்,  மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இளைஞர் கழக தேசிய சம்மேளனம் போன்ற பதவிகளுக்கு போட்டியிடவும்  இணைந்து கொள்ளவும் முடியும், மாவட்ட சம்மேளனத்திற்க்கு புதியவர்களை அழைக்கிறேன்.

இரண்டு வருடங்களில் மீண்டும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் இப்போதைய நிலையினை இன்னும் பலப்படுத்தி வெற்றிபெறலாம்.

அனைவரும் வாருங்கள் முன்மாதிரியான இளைஞர்களாக நாம் கரம் கோர்த்து மாவட்ட  இளைஞர்களை வழிநடத்தி செல்வோம் எமது மாவட்ட இளைஞர்க முன்னேற்றத்திற்க்கு ஆக்க பூர்வமான பணிகளை ஆற்றுவதற்க்கு தேவைப்பாடுகள் அதிகம் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.