மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏல விற்பனை!

0

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாவிக்கப்பட்ட பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) பகிரங்க ஏலவிற்பனை செய்யப்பட்டது.

மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள், வியாபாரிகள், அலுவலகர்கள் என பலரும் கலந்து கொண்டு பொருட்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டியதையும் அங்கு காணப்பட்ட அலுவலக பாவனைக்குட்படுத்தப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது.