மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையங்கள் தவிர வேறு எந்த வர்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவிக்கின்றார்.

இதன்படி ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் தற்காலிக சந்தைகள், அத்தியாவசிய பலசரக்குக் கடைகள், பழக்கடைகள், மற்றும் மருந்து விற்பனை நிலையங்கள் மாத்திரமே திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபடலாமென கொரோனா தடுப்பு மாவட்ட செயலணியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் நாளைய தினம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வுத்தரவை மீறி செயற்படுகின்ற வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இச்செயற்பாட்டினைக் கண்காணிப்பதற்கு சகல பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி அதிகாரசபை, பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.