மட்டக்களப்பு – வவுணதீவு அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

0

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தின் உன்னிச்சை 6ஆம் கட்டையில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட உள்ளூர் யுத்தம் காரணமாக மக்கள் இடப்பெயர்வு காரணமாக கைவிடப்பட்டு யுத்ததினால் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பற்றை காடுகளால் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தின் நிலை குறித்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகைக்கு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை புனரமைப்புச் செய்வதற்கு திருவுள்ளம் கொண்டு அப்பணியினை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் அயராத முயற்சியுடனும் ஊர் மக்கள் மற்றும் பண உதவிகளை வழங்கிய பரோபகாரிகள், தனவந்தர்களின் பங்களிப்புடன் இவ்வாலயம் மிகவும் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகர முதல்வர் ரி.சரவணபவன் மற்றும் கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் சந்திரகாந்தா, வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் சதா சுபா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.