மட்டு. புனித மரியாள் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சிலுவைப்பாதை வழிபாடு!

0

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருச்சிலுவைப் பாதை திருப்பவணி நிகழ்வு பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இயேசுவின் திருப்பாடுகளை வெளிப்படுத்தும் நாற்பது நாட்கள் கொண்ட தவக்கால வழிபாட்டின் இறுதி நாளான இன்று புனித வெள்ளிக் கிழமை விசேட வழிபாட்டு நிகழ்வாக இச் சிலுவைப்பாதை திருப்பவணி இடம்பெற்றது.

தேவாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச் சிலுவைப் பாதை பவணியானது புளியந்தீவின் பல பாதைகளினூடாக வருகை தந்து மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதன் போது பதின்நான்கு ஸ்தலங்களில் இயேசு கிறீஸ்துவின் பாடுகளின் தியானங்கள், சிந்தனைகள், செபங்கள் மூலம் பக்தி பூர்வமாக வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.