மட்டு வாலிபர் முன்னணி புல்லுமலையில் உதவித்திட்டம் முன்னெடுப்பு.

0

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் இன்று ஞாயிற்றுக்கிழமை(09.02) மனிதநேயப்பணி ஒன்று முன்னெடுப்பு.

மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மனித நேய உதவித்திட்டத்தில் புல்லுமலை மிகவும் பின்தங்கிய கிராமமென்றில் வசிக்கும்வறுமைக்குட்பட்ட கர்ப்பிணித்தாய், அதே தாயின்  போசாக்கு குறைபாட்டால் தோல் நோய்  பாதிப்பிற்குள்ளான இரு பிள்ளைகள், யானைத்தாக்குதலுக்குள்ளாகி பாதிப்புக்குள்ளான குடும்பத் தலைவன் ஆகியோருக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மனிதநேயப்பணியில் தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், கோறளைப்பற்று பிரதேச  (வாழைச்சேனை) இணைப்பாளர்  கே.தேவகாந்தன் , மண்முனை வடக்கு (மட்டக்களப்பு)  பிரதேச இணைப்பாளர்
எஸ்.ஜனகன், வாலிபர் முன்னணியின்  கல்வி துறை பொறுப்பாளர் தே.மயூரன் ,
மாற்றுத்திறனாளிகள் அபிவிருத்தி துறை பொறுப்பாளர்  கே. சோபனன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.