மட்டு.வாழைச்சேனை காட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு

0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவுக்கு, இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பகுதியிலுள்ள நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.