மணல் ஏற்றிச் செல்வதற்கு இன்று முதல் அனுமதி!

0

மணல் ஏற்றிச் செல்வதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுமென சுரங்க பணியக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மணல் இல்லாமை காரணமாக  கட்டட நிர்மாண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கமைய அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய  அனுமதி வழங்குவதற்கு சுரங்க பணியகம் தீர்மானித்துள்ளது.

இதேவேனை மணல் மண் ஏற்றிச் செல்வதற்கான நடைமுறைகள் குறித்தும் அனுமதி வழங்குவது தொடர்பிலும் தயாரிக்கப்பட்ட சுற்றறிக்கை நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுரங்க பணியக திணைக்களம் தெரிவித்துள்ளது.