மண்முனை மேற்கில் 270 மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில்.

0

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசிலுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01.03.2020ம் திகதி) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போாது கடந்த 2017ம் ஆண்டில் க.பொ த சாதாரணதரம் சித்தியடைந்து உயர்தரம் கல்விபயிலும் 31 மாணவர்களுக்கும்  2018 இல் க.பொ த சாதாரணதரம் சித்தியடைந்து உயர்தரம் கல்விபயிலும் 239 மாணவர்களுக்குமாக 270 மாணவர்களுக்கு மாதாந்தம் 1500 ரூபா இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கென சமுர்த்தி சமுகப் பாதுகாப்பு நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் க.தங்கத்துரை, திட்ட முகாமையாளர் எஸ்.ரஜிந்தினி, சமுகப் பாதுகாப்பு விடய உத்தியோகத்தர் கே. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு  மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.