விவசாயிகளிடமிருந்து, மஞ்சள் மற்றும் சோளம் உள்ளிட்ட விளைச்சல்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கு தலையீடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள்நாட்டு விவசாயிகளினால் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு மஞ்சள் மற்றும் சோளம் உற்பத்திகள் வெற்றிகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த விளைச்சல்களின் போது, விவசாயிகளுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள மஞ்சள் தொகையை, அழிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விவசாய நடவடிக்கைகளின் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மதுபானம் மற்றும் எதனோல் உற்பத்திக்காக சோளம் பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வெளியிடுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.