மதுபான சாலைகளை மூடுமாறு உத்தரவு!

0

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் மதுபான சாலைகள் திறக்கப்பட்டிருந்தன.

இதன்போது மதுபான சாலைகளில் அதிகளவான மக்கள் கூடியிருந்த நிலையில் உடன் அமுலுக்கு வரையில் அவற்றினை மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.