மந்திரவாதி பெண்ணிடம் அழைத்து செல்லப்பட்ட சிறுமி மரணம்

0

மீகஹவத்த, தெல்கொட கந்துபொட பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமிக்கு அமானுஷ்ய தோஷம் ஒன்று உள்ளதாக கூறி மாந்தீரிகம் செய்யும் பெண்ணிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது சிறுமிக்கு தோஷம் நீக்க வேண்டும் என கூறி குறித்த பெண் பிரம்பினா் அடித்துள்ளார். இதன் போது சிறுமி மயக்கமடைந்த நிலையல் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமிக்கு அமானுஷ்ய தோஷம் ஒன்று உள்ளதாக தெரியவந்த பின்னர் அவரை அவரது தாயார் மந்திரவாதியான பெண்ணிடம் அழைத்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரம்பினால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான பல்வேறு சம்பவங்களால் இதற்கு முன்னரும் சில சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெறுள்ளன.

இது போன்ற விடயங்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.