மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்! விஞ்ஞானிகள் தகவல்

0

மனிதர்களின் வாழ்நாளை 120 – 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என சிங்கப்பூர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜிரோ என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிமோதி பைர்கவ் தலைமையிலான குழு மனிதர்களின் வாழ்நாள் நீடிப்பு குறித்த ஆய்வறிக்கையை ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ இதழில் வெளியிட்டுள்ளது.