மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் – விக்னேஸ்வரன்

0

சர்வதேச சமூகம், இலங்கை விடயத்தில் அரசியல் ரீதியான அணுகுமுறையை விடுத்து மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐ. நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக எத்தகைய தீர்மானம் கொண்டுவருவது என்று உறுப்பு நாடுகள் ஆராய்ந்துவரும் வேளையில் ஒக்லன்ட் நிறுவனத் தால் வெளியிடப்பட்ட அறிக்கை மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் வடக்குக் கிழக்கில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை குறித்த அறிக்கை எடுத்துரைப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அனுராதா மிட்டால் வெளியிட்டிருக்கும் எண்ட்லஸ் வார் என்ற இந்த அறிக்கை, சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், வடக்குக் கிழக்கில் நடக்கும் விடயங்களை உலக சமூகம் தமது கண்களைத் திறந்து பார்த்து, அவற்றை கருத்தில் எடுத்து, உரிய அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.