மன்னாரைச் சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு!

0

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன்  பியூஸ்லஸ் என்பவரே நேற்றைய தினம்(சனிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அத நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராகவும் விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார். அந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இவ்வருடத்திற்க்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் இரண்டாவது வீரராக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இறுதியாக வந்த தகவல்களின் அடிப்படையில் மாலைதீவில் இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய மரணத்திற்கான காரணத்தை இன்னும் அறிய முடியவில்லை.

எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக அவரது மரணம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.