மருத்து நீரை வீடுகளிலேயே தயாரித்து புதுவருடத்தை கொண்டாடுங்கள்- அந்தணர் ஒன்றியம்!

0

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை புதுவருடக் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் பிரபாகரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மருத்து நீரைத் தயாரித்து கோவில்களுக்கு வருவதைத் தவிர்த்து இயன்றவரை பாதுகாப்பான முறையில் உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபட்டு மகிழ்வுடன் புதுவருடத்தைக் கொண்டாடுமாறு அவர் தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, வரும் 14ஆம் திகதி கோயில்களுக்கு வருபவர்கள் தங்களுடையதும் சமூகத்தினுடையதும் நலனைக் கருத்தில் கொண்டு முகக் கவசங்களை அணிவதுடன் கோயில்களில் சமூக இடைவெளியை பின்றபற்றுமாறும் கோரியுள்ளார்.