மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சஜித்துடன் தொடர்புடையவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.