மலேரியாவிற்கான மருந்தினை அனுமதியின்றி வழங்க வேண்டாம் என எச்சரிக்கை!

0

மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தும் க்ளோராக்வின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோக்வின் ஆகிய மருந்துகளை வைத்திய நிபுணர்களின் அனுமதி இன்றி வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இந்த விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து சில்லறை விற்பனை மருந்தகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இதனை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.