மலையகமாக மாறிய மட்டக்களப்பு

0

இன்று அதிகாலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பனிமூட்டம் காணப்பட்டது.

இந்தப் பனிமூட்டம் வழமைக்கு மாற்றமாக மலையகத்தைப் போன்று படர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

சூரியன் உதயமாகியிருந்தபோதும் பனிமூட்டம் காரணமாக இருள் சூழ்ந்து இருந்ததால் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டே பயணிக்க வேண்டியிருந்தது.

இந்தப் பனி மூட்டமானது காலை 8 மணி வரை படர்ந்திருந்த நிலையில் மலையத்தை போன்று மட்டக்களப்பு காட்சியளித்திருந்தது.