மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

0

எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாமென, திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.