மஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்!

0

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அண்மையில் சிகிச்சைகளுக்காக வருகை தந்த ஒருவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, வைத்தியசாலைப் பணியாளர்கள் 15 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்,  ஏற்கனவே தனக்கு கொரோனா தொற்று உள்ளாகி இருப்பதை அறிந்திருந்த நிலையிலேயே, வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்ததாக வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புத்தளம்  – ஆனமடுவ பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதையடுத்து,  குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 09 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.