மஹர சம்பவத்திற்கு கவலையை வெளியிட்டார் அலி சப்ரி

0

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்திற்கு அரசாங்கம் என்ற விதத்தில் தாம் கவலை அடைவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்றை தான் நியமித்துள்ளதாகவும், அவர்களின் முழுமையான அறிக்கை ஒரு மாத காலப் பகுதிக்குள் தமக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிடையில், ஒரு வாரத்தில் குறித்த குழு, இடைகால அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.