மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் ஒருவர் உயிரிழப்பு

0

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால், கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அமைதியின்மை காரணமாக மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட பின்னணியில், மேலும் சில கைதிகள் சிறைச்சாலையை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.