மஹிந்தவின் அழைப்பு – கலந்துகொள்ள முடியாதென்கின்றது ஜே.வி.பி.

0

பிரதமர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது நாடாளுமன்ற குழு கலந்துக்கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைத் தொடர்பில் கலந்துரையாட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 225 உறுப்பினர்களையும் எதிர்வரும் எதிர்வரும் நான்காம் திகதி முற்பகல் 10 மணிக்கு அலரி மாளிகைக்கு அழைத்தார்.

இந்த நிலையில் அவ்வாறான கலந்துரையாடலை நடத்துவதில் நன்மையில்லை என்பதால் அந்த அழைப்பை நிராகரித்து கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான இந்த சூழ்நிலையை சமாளிக்க நாடாளுமன்றம் கூட்டப்பட்ட வேண்டும் அல்லது தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கேட்கப்பட வேண்டும் என்று அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதற்கு யோசனையொன்றையும் மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளது.

அதாவது, அனைத்துக்கு கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கலந்துரையாடி ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதே சிறந்தது என்றும் அநுர குமார சுட்டிக்காட்டியுள்ளார்.