மஹிந்தவிற்கும் மோடிக்கும் இடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் இன்று!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று(சனிக்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்போது, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன்  பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இடையில் இணையவழி இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுடன் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.